ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த 7 வயது சிறுவன்

441

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஏழு வயது சிறுவன் சுழற்பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்ட சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மெல்போர்னில் துவங்குகிறது.
இதற்கான ஆஸ்திரேலிய அணியில்,15 வது கவுரவ வீரராக “ஆர்ச்சி சில்லர்” என்ற எழு வயது சிறுவன் இடம் பெற்றுள்ளான்.
மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது சிறுவன் ஆர்ச்சியின் இருதய வால்வில் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை13 முறை அறுவை சிகிச்சை செய்துள்ள, நிலையில் நேரம் கிடைக்கும் போது கிரிக்கெட் மட்டும் விளையாட்டி வந்த ஆர்ச்சி சில்லர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆக வேண்டும் என்ற ஆசையை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளான்.
இந்த கோரிக்கையை ஏற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் ஆர்ச்சியை துணை கேப்டனாக அறிவித்துள்ளனர்.
மெல்போர்ன் யாரா பார்க்கில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியில் சில்லர் இடம் பெறுவதை கேப்டன் டிம் பெய்ன் அறிவித்தார். இதனிடையே சில்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of