70 லட்சம் மதிப்புள்ள 2203 கிராம் தங்கம் பறிமுதல் – திருச்சி விமான நிலையம்

357

இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்தது.

அதில் பயணம் செய்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்திய போது, ரூ.70 லட்சம் மதிப்புள்ள 2,203 கிராம் தங்க செயின்களை கழுத்தில் அணிந்து அதனை துணியால் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரிக்கும் போது அவர்கள் மலேசியாவை சேர்ந்த தனலட்சுமி மற்றும் சசிகலா என தெரியவந்தது.

அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது எப்படி? யாருக்காக கடத்தி வந்தார்கள்? குருவியாக செயல்பட்டு கடத்தி வந்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of