சாலை விதி மீறல் ! ஓட்டுநருக்கு 70 ஆயிரம் அபராதம் | Odisha | Driver

436

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி, புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் சாம்பல்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்த போலீசார், விதிகளை மீறியதாக கூறி லாரி ஓட்டுநருக்கு 86 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர்.

பின்னர் 5 மணி நேரம் பேச்சுவார்த்தையை அடுத்து, 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், லாரி ஓட்டுநருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது