73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

134

1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள்நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது.ஏனென்றால் இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம்.

நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அரை நூற்றாண்டுகளையும் கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

என்றால் அதற்கு முதன்முதல் காரணம் நமது தேசிய தலைவர்களும் போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது அவர்களை தைரியத்துடனும் துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும் கிளர்ச்சிகளையும் போர்களையும் நடத்தி வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளனர்.

சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம் என்றென்றைக்கும் கொண்டாடுவோம். தற்போது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்.

இன்றைய தினம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்15 விடுதலை அடைந்து தனி நாடானதை குறிக்கும் இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்திய பிரதமர் டில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.அப்போது தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

மேலும் பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும் வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டுமக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் முதலமைச்சர் தெசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

பின்பு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்.இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட தலைவர்களும் அரசு அலுவலகங்களில் அதன் உயர் அதிகாரிகளும் பள்ளி கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்களும் முதல்வர்களும் அல்லது  சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியெற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of