ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 750… ஸ்கேனை பார்த்து பயந்த பெண்

911

சென்னையை அடுத்த 29வயதான பெண் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

திடீரென வந்த இந்த வயிற்று வலி இரண்டு மாதங்களுக்கு  மேலாக நீடித்தது. அதன் பின் ஸ்கேன் செய்து பார்த்த போது பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்க்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 759 நீர்க்கட்டிகள் வயிற்றுக்குள் இருந்தன. இதனை  மருத்துவர்கள்  அகற்ற முடிவு செய்தனர். ஒரே அறுவை சிகிச்சையில் அனைத்து நீர்கட்டிகளை அகற்றி சாதனை படைத்தனர்.

வயிற்றில் நீர்கட்டிகள் வளரும் போது எந்த விதமான அறிகுறிகளும் நோயாளிகளுக்கு தெரியாது. நீர்க்கட்டிகள் வளர்ந்த பிறகு கடுமையான வயிற்று வலி ஏற்படும். அப்போது தான் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரியும்.

நீர்க்கட்டிகள் வயிற்றுக்குள் வெடித்தால் அது உயிரை காவு வாங்கிவிடும். எனவே சுத்தமான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் செல்லபிராணிகளை வளர்ப்பவர்கள் கைகளை தனது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பிறகு உணவுகளை சாப்பிட வேண்டும். எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of