ஆயுதபூஜையை முன்னிட்டு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு

226
tnstc

இன்று முதல் ஞாயிறு வரை தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், பொது மக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமையன்றும் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு முதலலே சென்னையில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.