உத்தரப் பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சலுக்கு 79 உயிரிழப்பு

371

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், இயல்பு நிலை திரும்புவதற்குள், மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

பரேலியில் 24 பேரும், பாடனில் 23 பேரும், ஹர்டோயில் 12 பேரும், சீதாப்பூரில் 8 பேரும், பஹ்ரைச்சில் 6 பேரும், பிலிபிட் மற்றும் ஷாஹஜான்புரில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உத்தரப் பிரதேச அரசு, மக்களுக்கு தேவையான மருத்துகளையும் விநியோகித்து வருகிறது.