6-வது கட்ட மக்களவை தேர்தலில் 6 மணி வரை 59.70 சதவீத வாக்குப்பதிவு

363

இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6-வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

சில வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். மாலை 6 மணி வரையில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் மொத்த வாக்குப்பதிவு 59.70 சதவீதம் ஆகும்.

பீகார் (8), அரியானா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தரபிரதேசம் (14), மேற்குவங்காளம் (8), டெல்லி (7) தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

6 மணிவரையில் அதிகப்பட்சமாக மேற்கு வங்காள மாநிலத்தில் 80.13 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. டெல்லியில் 55.44 சதவீத வாக்கும், அரியானாவில் 62.14 சதவீத வாக்கும், உத்தரபிரதேசத்தில் 50.82 சதவீத வாக்கும், பீகாரில் 55.04 சதவீத வாக்கும், ஜார்க்கண்டில் 64.46 சதவீத வாக்கும், மத்திய பிரதேசத்தில் 60.12 சதவீத வாக்கும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of