படிப்பது 7-ஆம் வகுப்பு..! வேலை செய்வது சாஃப்ட்வேர் கம்பேனி..! மாஸ் காட்டும் சிறுவன் சித்தார்த்..!

641

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சிறுவன் சித்தார்த். ஸ்ரீ-சைத்தன்ய டெக்னே பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனுக்கு, Montaigne Smart Business Solutions என்ற நிறுவனத்தில் டேடா சைன்டிஸ்ட்டாக வேலை கிடைத்துள்ளது.

இதுகுறித்து சிறுவன் சித்தார்த் பேசும்போது, என்னுடைய மிகப்பெரிய ரோல்மாடலாக இருந்தவர் Tanmay Bakshi என்றும், அவர் மிகவும் இளம்வயதிலேயே கூகுள் நிறுவனத்தில் டெவலப்பராக பணியில் அமர்த்தப்பட்டார் என்றும் தெரிவித்தான்.

தொடர்ந்து பேசிய சித்தார்த், தான் இளம் வயதிலேயே இவ்வாறு பணியில் அமர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது தன்னுடைய தந்தை தான் என்றும், அவர் தான் தனக்கு சிறு வயதில் இருந்தே கோடிங் குறித்து கற்றுக்கொடுத்தார் என்றும் தெரிவித்தான்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of