வட சென்னையில் 8 பேரை காவு வாங்கிய கொரோனா..!

484

சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது பெண், சிறுநீரக பிரச்னையால் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கொரோனாதொற்று இருந்தது கடந்த 31ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புளியந்தோப்பு கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் சர்க்கரை நோயால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், கடந்த 31ம் தேதி இரவு இறந்தார்.

பெரவள்ளூர் சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 80 வயது முதியவர் கடந்த 21ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

பெரம்பூர் வாசுதேவன் தெருவை சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு கடந்த 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 31ம் தேதி இரவு உயிரிழந்தார்.

கொளத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர், மூச்சுத் திணறலால் கடந்த 30ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை உயிரிழந்தார்.

கொடுங்கையூர் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 48 வயது நபர், சர்க்கரை நோய்க்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது. கிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

பாரிமுனை கொத்தவால்சாவடி சீனிவாச ன் தெருவில் வசித்த 67 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

மாதவரம் சாமியப்பன் தெருவை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement