8 வழிச்சாலை கண்டிப்பாக வரும் – நிதின் கட்காரி திட்டவட்டம்

170

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.

மேலும் இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை எட்டு  வழி பசுமைச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of