குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை.. பெற்றோரின் பகீர் செயல்.. அதிர்ந்த மருத்துவர்கள்..!

1851

பிரிட்டனை சேர்ந்தவர் டிஃபன்னி டேட். இவருடைய வயது 21. இவருடைய கணவரின் பெயர் மைக்கேல் ரோ. இவரின் வயது 32. இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சென்ற வருடம் டிஃபன்னி கருவுற்றார். 8 மாதம் கர்ப்பமாக இருந்தபோது குழந்தை பிறக்கப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
குறைப்பிரசவத்தில் பிறந்ததால் 4 வாரங்களுக்கு மருத்துவமனையிலேயே குழந்தை பரிசோதனையில் வைக்கப்பட்டிருந்தது.

குழந்தை நலமான பிறகு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது டிபன்னி குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தின் கீழே “என் அழகான இரண்டு பெண்கள்” என்று மைக்கேல் ரோ பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படம் வெளியிட்ட ஒரு மாதத்திற்கு உள்ளேயே குழந்தை மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டது. உடனடியாக அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அழைக்கப்படும் அந்த குழந்தை உயிரிழந்தது.

பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை ரிபோட்டில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து குழந்தையின் பெற்றோரிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அப்போது பெற்றோர் இருவரும் தாங்கள் தான் குழந்தையின் தலைப் பகுதியில் பலமாக தாக்கினார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

தனது 8 மாதக்குழந்தையை இப்படி செய்து உயிர்போக வைத்தது பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of