முன்விரோதத்தால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பியை கொலை செய்த வழக்கில் 8 பேர் கைது

877

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக முன்னாள் தம்பிய வெட்டிக் கொலை செய்த வழக்கில் 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேல்மணம்பேடு கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் நடைபயிற்சி மேற்கொண்ட போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு திருவள்ளுர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தங்கராஜ் தம்பி வெங்கட்ராமன் ஆஜராகி முக்கிய சாட்சியம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி அன்று காலை மேல் மணம்பேடு கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வெங்கட்ராமன் பேசிக் கொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு காரில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்.

வெங்கட்ராமனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெள்ளவேடு காவல்துறையினர் திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மப்பேடு அடுத்த பண்ணூர் பகுதியில் மறைந்திருந்த ராஜேஷ், தினேஷ், இளங்கோவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

Advertisement