8 போலீசார் கொலைக்கு பின் 3-வது என்கவுன்ட்டர்

114

உத்தரப்பிரதேசம் கான்பூரில் 8 போலீஸார் ரவுடி கும்பலால் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் முக்கியக் குற்றவாளி விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே சிறப்பு அதிரடிப்படை இன்று நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள பிக்ரு என்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனர். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தில், மவுதாஹா எனும் கிராமத்தில் அமர் துபே பதுங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படை மவுதாஹா கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்து அமர் துபேயை கைது செய்ய முயன்றனர். ஆனால், அமர் துபே போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

8 போலீஸார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே இருவரை கடந்த வெள்ளிக்கிழமை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். இப்போது 3-வது ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of