புழல் சிறையில் கைதி சொகுசு வாழ்க்கை : 8 சிறை அதிகாரிகள் இடமாற்றம்

387
puzhal-jail

புழல் சிறையில் கைதி சொகுசு வாழ்க்கை வாழ்வது போல் புகைப்படங்கள் வெளியான விவகாரத்தில் 8 சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே புழல் சிறையில் இருந்து 18 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் கடந்த வார இறுதியில் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. சொகுசு வாழ்கை புகைப்படம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 2 தலைமை வார்டன்கள் மற்றும் 6 முதல்நிலை வார்டன்கள் உட்பட 8 சிறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையின் தலைமை வார்டன் கணேசன் செங்கம் கிளைச் சிறைக்கும், மற்றொரு தலைமை வார்டன் விஜயராஜ் உதகை கிளைச் சிறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வார்டன் பாவாடைராயர் வேலூர் சிறைக்கும், வார்டன் ஜெபஸ்டின் செல்வகுமார் கோவைக்கும்,

வார்டன் சிங்காரவேலன் சேலம் சிறைக்கும், வார்டன் சுப்பிரமணி திருச்சி சிறைக்கும்,

வார்டன் செல்வகுமார் வேலூர் சிறைக்கும், வார்டன் பிரதாப் சிங் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here