திமுக கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்

854

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

1.காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்!

2.ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதியோம்!

3.வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்!

4.காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்; கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை !

5.பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்க!

6.பெட்ரோல் – டீசல் விலை உயர்வைக் கண்டித்து,10ஆம் தேதி நடைபெறும் “பாரத் பந்த்” வெற்றி பெற ஒத்துழைப்போம்!

7.குட்கா ஊழலில் கொழித்த அமைச்சரை “டிஸ்மிஸ்” செய்க! டி.ஜி.பியைப் பதவி நீக்கம் செய்க!

8.ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி தி.மு.கழகத்தின் சார்பில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of