பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள்..! ரத்த வெள்ளத்தில் மிதந்த 8 குழந்தைகள்..!

3065

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கேமரூன். இந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கும்பா மாகாணம் பியாங்கோ நகரில் சர்வதேச கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

நேற்று காலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது துப்பாக்கிகளுடன் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

அப்போது இந்த கோர சம்பவத்தில் மாணவர்கள் 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement