சேலம் 8 வழிச்சாலை ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

441

சேலம் – சென்னை 8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் – சென்னை  8 வழிச்சாலைக்கு பல்வேறு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது..

இதனையடுத்து இது தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், இந்த திட்டத்தை ரத்து செய்து, அரசின் அறிவிப்பணையையும் ரத்து செய்துள்ளது.

இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of