முதுமையால் 8 வயது சிறுமி உயிரிழப்பு!

249

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற பெண் குழந்தை இருந்தது.உலகில் வெறும் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால், அக்குழந்தையும் பாதிக்கப்பட்டிருந்தது.

8 வயதே ஆன அச்சிறுமி, 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். வெறும், 7 கிலோ எடைகொண்ட அவர் உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவ மனையில் அச்சிறுமியின் உடல் உள் உறுப்புகள், அடுத்தடுத்து செயலிழந்தன.

டாக்டர்கள் கடுமையாக போராடியும் பலனளிக்காததால், நேற்று முன்தினம், சிறுமி அன்னா சாகிடோன், பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of