குற்றங்களை தடுப்பதற்காக 18கிமீ தொலைவிற்கு 800 கண்காணிப்பு கேமராக்கள்!

150

கிண்டியில் இருந்து பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு 800 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன

 

கிண்டியில் அவற்றை தொடங்கி வைக்கும் விழாவில் காவல் ஆணையர் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.

சென்னையில் குற்றங்களை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே 2 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மேலும் 2 லட்சம் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது போன்ற ஒரு முயற்சி வேறு எந்த மாநகரிலும் அமையவில்லை எனக் கூறிய விஸ்வநாதன், சாலை விதிகளை மதிப்பது தங்களுக்கான பாதுகாப்பு என்பதை மக்கள் உணர வேண்டுமென வலியுறுத்தினார்.