1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்!

1097

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்ணனியாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். நளினமான நடன அசைவுகளுக்கு ஜான் பிரிட்டோ பொறுப்பேற்றிருக்கிறார்.

ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படம் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. மேலும் தகவல்கள் அதிவிரைவில் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of