ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 82, 752 வழக்குகள் பதிவு

286

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றியதாக ஒரே நாளில் 82 ஆயிரத்து 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 90 ஆயிரத்து 918 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே சுற்றி வருகின்றனர்.

அவர்களை போலீசார் பிடித்து நூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தாலும் மக்கள் வெளியில் சுற்றி தான் வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக ஒரே நாளில் 82 ஆயிரத்து 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 90 ஆயிரத்து 918 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 923 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை மொத்தம் 71 ஆயிரத்து 204 வழக்குகள் பதிவு செய்து 78 ஆயிரத்து 707 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 59 ஆயிரத்து 868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 21 லட்சத்து 26 ஆயிரத்து 44 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of