“இவங்களுக்கு இன்னும் வயசாகல..” 82 வயதில் மாஸ் காட்டும் மூதாட்டி..!

12881

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த சோர்டியா சிராக் என்பவர், சென்னையில் ஜிம் டிரைனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 82 வயதில் பாட்டி ஒருவர் உள்ளார்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய இந்த பாட்டி, கனுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, படுத்த படுக்கையாகி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்தும் தனது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, பாட்டிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

கீழே விழும் பொருட்களை கூட, குனிந்து எடுப்பதற்கு அவர் பயந்துள்ளார். ஒரு வழியாக தனது அச்சத்தை வென்ற அந்த பாட்டி, தனது பேரன் சிராக்கிடம், உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டார்.

முதலில், எடை குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்களை கொண்டு பயிற்சி செய்து வந்த இவர், தற்போது டம்புள்ஸ் மூலம் உடற்பயிற்சியை செய்கிறார். 82 வயதிலும் இவ்வாறு உடற்பயிற்சியில் ஈடுபடும் இவர், பல்வேறு இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறார்.

மூதாட்டி பலு தூக்கும் வீடியோ

Advertisement