சிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்

279

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் சுற்றுலாபயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை காஷ்மீருக்கு 316,434 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.

2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 43,059 ஆக குறைந்தது, இது 86 சதவீத சரிவு ஆகும் என இந்தியா ஸ்பென்ட்  சுற்றுலாத் துறை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. ஜூலை 2019 இல், காஷ்மீர் 152,525 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

ஆனால் ஆகஸ்ட் 2019 இல் 10,130 பேர் மட்டுமே வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் 2019 செப்டம்பரில் 4,562 ஆக குறைந்து, 2019 நவம்பரில் 12,086 ஆக உயர்ந்தது.”குல்மார்க்கில் குளிர்கால விளையாட்டுகளின் போது நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்று மேம்பட்டது.

ஆனால்  2019 டிசம்பரில் மீண்டும் 6,954 ஆக குறைந்தது என்று சுற்றுலா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 5, 2019  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து நிலைமைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக, இந்தியா ஸ்பென்ட் 2019 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான ஒப்பீட்டு புள்ளி விவரங்களை ஆய்வு செய்தது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2018 இல் முறையே 85,534 மற்றும் 103,195 சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வந்து உள்ளனர். 2019 ஆம் ஆண்டில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 10,130 மற்றும் 4,562 ஆக இருந்தன. இது முறையே 88% மற்றும் 95% வீழ்ச்சி ஆகும்.

காஷ்மீர் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறையின் மதிப்பீட்டின்படி, ஆகஸ்ட் 5, 2019 முதல், காஷ்மீரின் சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் துறையில் 144,500 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கே.சி.சி.ஐ மதிப்பீடுகளின்படி ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட வணிக இழப்பு ரூ.15,000 கோடி என்றும், மொத்த வேலை இழப்பு 496,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு உருவாகி வரும் சூழ்நிலை காரணமாக காஷ்மீரின் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டு உள்ளது.

கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையில்லாமல் இருக்கும்போது சுற்றுலா குழப்பத்தில் உள்ளது என்று கே.சி.சி.ஐ துணைத் தலைவர் கூறி உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of