ஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையில் மாற்றம்! குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு!!

1242

மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், வாகனத்தை இயக்குவதற்கான திறனுடன், போக்குவரத்து விதிகள் தொடர்பாக அறிந்திருப்பது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விரைவில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து துறையிலும், தளவாடங்கள் துறையிலும் 22 லட்சம் ஓட்டுநர்கள் தேவைப்படுவதால், அந்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இந்த முடிவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of