பயங்கரவாதிகளின் தாக்குதலால் 4 ராணுவ வீரர்கள் பலி

398

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த அமைப்பின் தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நைஜீரியாவின் ராணுவ தளத்தின் மீது போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். 4 துப்பாக்கி டிரக்குகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்து தாக்கினர்.  இந்த தாக்குதலுக்கு ராணுவத்தினர் பதில்  தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவம் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு 2009ம் ஆண்டு நைஜீரியாவின் அரசினை எதிர்த்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of