என்ன ஒரு ஒற்றுமை ! ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 தோழிகள்.

583

அமெரிக்காவில் போர்ட்லேண்ட் பகுதியில் ஒரு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் 9 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த 9 செவிலியர்களும் திருமணமானவர்கள். இந்நிலையில் இந்த 9 செவிலியர்களும் தற்போது ஒரே நேரத்தில் கர்ப்பமாகியிருக்கின்றனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மருத்துவமனையில் 9 பேர் வேலை பார்க்கும் போது ஒற்றுமையாக இருப்பார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நன்கு அறிந்த நண்பர்களாகவே இருந்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஒருவர் பின் ஒருவராக கர்ப்பமாக துவங்கினர். இவர்களுக்கு வரும் ஏப்ரல் -ஜூலை மாதம் குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

america

இந்த தகவலை அவர்கள் பணியாற்றும் மருத்துவமனை நிர்வாகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது அந்த 9 பேரும் ஒரே நேரத்தில் விடுமுறையில் செல்லவிருப்பதால் அவர்களுக்கு பதிலாக வேறு சிலரை பணிக்கு நியமிக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் அந்த 9 பேருக்கு அந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றுக் கொள்ள அவர்களது குடும்பத்தாரிடம் கேட்டு கொண்டுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.