குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேர் ஈரான் சிறையில் அடைப்பு

434

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம். லீபுரம் சின்னவிளை, பள்ளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் குவைத்தில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

இவர்கள் அங்குள்ள கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 9 பேரை ஈரான்  கடற்படையினர் கைது செய்து அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது உறவினர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து  ஈரான் சிறையில் உள்ள தங்களது உறவினர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கும் அவர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of