9 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! டிக்-டாக் வீடியோவால் நடந்த விபரீதம்!

832

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ளது குறிச்சிகுளம். இந்த கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், சிறுவனை டிக்-டாக் வீடியோ காட்டுவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of