மீண்டும் நித்தியானந்தாவுக்கு கடிதம்..! இந்த முறை பெண் கேட்டு வந்த சிஷ்யன்கள்..!

221

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவர் நித்தியானந்தா. கைலாசா என்ற நாட்டில் வசித்து வருவதாக கூறப்படும் இவருக்கு, ஓட்டல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டது.

இந்த இரண்டு கடிதங்களும், இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், தற்போது இன்னொரு கடிதம் நித்தியானந்தாவிற்கு எழுதப்பட்டுள்ளது. அதில், “சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.

தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement