இலங்கையில் 9-வது குண்டுவெடிப்பு! துக்கத்திலும் ஒரு நன்மை!

1021

நேற்று காலை இலங்கை கொழும்புவில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது இன்னொரு பகுதியில் குண்டுவெடித்துள்ளது. கொச்சிக்கடாவில்தான் இந்த குண்டும் வெடித்துள்ளது. அப்பகுதியில் இருந்த கார் ஒன்றில் இந்த குண்டு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிக்கும் முன்பே மோப்ப நாயின் உதவியுடன் அதை கண்டுபிடித்துவிட்டனர். அங்கு வேகமாக வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுப்பட்டார்கள். சுமார் 10 நிமிடம் கஷ்டப்பட்டு அந்த குண்டை செயலிழக்க முயற்சி செய்தும் அவர்களால் செயலிழக்க செய்ய முடியவில்லை.

இதனால் அங்கிருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து அந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை, உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பதாவது குண்டுவெடிப்பு அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of