பள்ளி சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..! விளக்கத்தை கேட்டா மூக்கு மேல் விரல் வைப்பீங்க…!

1757

யானைகள் மனிதன் மீது நடத்தும் தாக்குதல்களும், மனிதன் யானைகள் தாக்க வரும்போது நடத்தும் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, ஊட்டி, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகமாகவே நடந்து வருகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வனத்துறை குழம்பி வரும் நிலையில், தனியார் பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவன் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளான்.
கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த அபிநவ நாகராஜன் என்ற மாணவர், அவனது ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி, இந்த கருவியை கண்டுபிடித்துள்ளான்.

இதுகுறித்து அபிநவ நாகராஜன் பேசும்போது, யானைகளுக்கு கேட்கும் திறன் அதிகம். நுண்ணிய ஒலியைக்கூடத் துல்லியமாக அறியக்கூடிய நுண்ணறிவு கொண்ட விலங்கு யானை. யானைகள் பொதுவாகவே, தேனிக்களின் ரீங்கார ஒலியை கேட்டு பயப்படும் தன்மைக்கொண்டது.

இந்த ஒலியை 8 மீட்டர் தூரத்திலேயே யானைகள் அறிந்துக்கொண்டு, அந்த பகுதியில் இருந்து அது விலகிவிடும். எனவே செயற்கை முறையில் தேனியின் ரீங்கார ஒலியை உருவாக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளேன்.

இந்த கருவியைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இக்கருவியை வீடுகள் மற்றும் சுற்றுச்சுவரில் பொருத்துவதன் மூலம், யானைகள்-மனிதர்கள் தாக்குதலை 100 சதவிகிதம் தடுக்கலாம்.

இந்தக் கருவியைச் சிறிய வடிவில் கைக்கடிகாரம் போன்ற சிறிய அமைப்பில் வடிவமைத்தும், கையில் அணிந்து கொண்டால், மலைப்பகுதிகளில் யானைகளால் ஏற்படக்கூடிய தனிமனித தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்க முடியும் என்று அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.