ஜாலியன் வாலாபாக் படுகொலையை பார்த்த 123வயது தியாகி மறைவு

78

ஜாலியன் வாலாபக் படுகொலையை நேரில் பார்த்த மூத்த சுத்தந்திர போராட்ட வீரர் சுதாகர் சதுர்வேதி 123. நேற்று முன் தினம் அதிகாலை காலமானார். பெங்களூரில் உள்ள பலேபேட்டில் 1897ல் பிறந்தவர்.

இவர் கன்னடம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் புத்தகம் எழுதியுள்ளார். அதிக ஆண்டுகள் வாழ்ந்த மூத்தவர் என்ற சாதனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்திக்கு தட்டச்சராக பணியாற்றியவர். 13 ஆண்டுகள் சிறைவாசகம் அனுபவித்தவர்.

1919-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரில் கண்டவர். ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்ட அனைவருக்கு இறுதி சடங்கு செய்யும் படி இவருக்கு மகாத்மா காந்தி உத்தரவிட்டார்.

இத்தனை நிகழ்வுகளை கண்ட மூத்த சுதாகர் சதுர்வேதி நேற்று முன் தினம் அதிகாலை காலமானார்.

இறுதி சடங்கு நேற்று முன் தினம் மாலை நடந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நேரில் பார்த்தவர்களில் மீதியிருந்த இவரும் மறைந்துவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of