ஒரு வாழைப்பழத்தார் 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்

272

ஒசூர் அருகே ஒரு வழைப்பழத்தார் 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போனது. தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் சீரத்துல் நபி விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் ஒரு அங்கமாக பள்ளிவாசலில் உள்ள அரிசிகள், எண்ணெய்கள், தானியவகைகள், வாழைப்பழத்தார்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

அப்போது, ஒரு வாழைப்பழத்தார் 100 ரூபாயில் விலை தொடங்கி 4 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. பள்ளிவாசலில் இருந்து பொருட்கள் வாங்கும்போது இறைவன் அளிக்கும் பரிசாக கருதுவதாக கூறி தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

Advertisement