மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்

386

மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் இமாலயா லிக்கர்ஸ் எனும் மதுபான கடை இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையை சாத்திவிட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.

அப்போது அங்கே வந்த சில மர்ம நபர்கள், கடை மீது, நாட்டு வெடிகுண்டை, வீசி வெடிக்க வைத்துள்ளனர்.

இதில், கடையின் ஷட்டர் பகுதி சேதமடைந்தது. கடையில் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of