சந்தைக்கு வந்த A/C Shirt, A/C T-Shirt

282

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும், பருவங்கள் கடுமையான மாற்றங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக வெயில் காலத்தில், பொறுத்து கொள்ள முடியாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

வீட்டில் இருக்கும் போது ஏசியை பயன்படுத்தி சமாளித்து கொள்ளும் மக்கள், வெளியில் செல்லும் போது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு சோனி நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.

Reon Pocket எனப்படும் சட்டையின் பின்புறத்தில் பொருத்திக் கொள்ளும் சிறிய அளவிளான ஏசியை சோனி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏசியை பயன்படுத்த, பிரத்யேக சட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஏசியை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால், 90 நிமிடங்கள் வரை குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம். மேலும், ஏசியின் வெப்பநிலையை ஸ்மார்ட்போன்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இந்த ஏசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மினி ஏசி விரைவில் இந்தியாவிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of