“You are Doing a Great Job” – ராணுவ வீரரை பாராட்டி சல்யூட் அடித்த சிறுமி – வைரல் வீடியோ

343

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆறுகளின் கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை, கடலோர காவல்படையினர் மூலம் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பல லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஒரு இடத்தில் சிறுமி ஒருவர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரரிடம் “ஆப் பஹூத் அச்சா காம் கர்த்தே ஹோ” அதாவது நீங்கள் செய்து வருவது மிக பெரிய காரியம் என்று பாராட்டி ஒரு சல்யூட் ஒன்றை அடித்து சென்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வறுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of