மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

357

தாராபுரம் அடுத்த சின்னக்காம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 4 நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழரசன், தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தமிழரசனின் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததால், மேல்சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார்.

தகவலறிந்த சக கல்லூரி மாணவர்கள் அனைவரும் மருத்தவமனையில் திரண்டு கதறி அழுதது காண்போரை கண் களங்க வைத்தது.

கடந்த 5 தினங்களுக்கு முன்பு தாராபுரத்தில் பிரகாஷ் என்ற இளைஞர் மர்ம காய்ச்சலால் பலியானது குறிப்பிடத்தக்கது.