சென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

312

சென்னை அருகே சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சோப்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையில் இருந்த ரசாயணங்களில் தீப்பற்றியதால் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றியது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் பல அடி உயரத்துக்கு புகை வெளியானது.

இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தகவலறிந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகை மண்டலத்தால் தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of