ஓடும் ரயில்..! ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்ணே செய்த கொடூரம்..! மும்பையில் பரபரப்பு..!

1012

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் லோயர் பரோல் ரயில் நிலையத்திலிருந்து தாதர் ரயில் நிலையத்திற்கு பில்லே என்ற பெண் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார். அந்த பெண் ரயிலில் ஒரு ஓரமாக நின்றுக்கொண்டு பயணித்திருக்கிறார்.

ரயில் மிகவும் கூட்டமாக இருந்துள்ளது. அப்போது ரயிலுக்குள் வந்த மற்றொரு பெண்ணை, பில்லே லேசாக இடித்துள்ளார். இதனால் மிகவும் கோபமடைந்த அந்த பெண், பில்லேவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பில்லேவை அந்த பெண், கடுமையாக தாக்கியும், கடித்தும் வைத்துள்ளார். இதையடுத்து பில்லேவை தாக்கிய அந்த பெண், ரயிலில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.

அவர் ஓடும் போது பில்லே தனது செல்போனில் அவரை புகைப்படம் எடுத்துவிட்டார். பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement