மறுமணத்திற்கு இடையூறு..! கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட 2 மாத குழந்தை..! தாய் கைது..!

526

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணம்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பைரோஸ்பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதியினருக்கு, 2 வயதில் பெண் குழந்தை ஒன்றும், 2 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் பைரோஸ்பானு தனது இரண்டு மாத கைக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக கணவருக்கு போனில் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்த கணேசன், குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக பைரோஸ்பானுவின் தந்தை குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பைரோஸ்பானு, பைரோஸ்பானுவின் தந்தை அக்பர் அலி, தாய் மதீனாபீவி மற்றும் அக்பர் அலியின் நண்பர் முகமது தல்கா ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of