15 ஆண்களை ஏமாற்றினாள் என் மனைவி குமுறிய 16-வது கணவன்!

457

தனது மனைவி 15 பேரை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கணவனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த உதயகுமார் என்பவர் முதல் மனைவியை விவகாரத்து செய்த நிலையில், ஏற்கெனவே விவகாரத்து ஆன, திருச்சியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் உதயகுமார் சிங்கப்பூர் சென்றிருந்தபோது, மகாலட்சுமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் கருவுற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உதயகுமார் திரும்பி வருவதற்குள் மகாலட்சுமி, வீட்டில் இருந்த பணம், நகைகளுடன் மாயமானதாக கூறப்படுகிறது.

மேலும் வயிற்றில் இருந்த கருவையும் கலைத்துவிட்டதாக உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி தன்னை போன்று மேலும் 15 பேரை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக திருச்சி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் அளித்துள்ளார்.