கெஞ்சி அழுத மனிஷா..! எல்லை மீறிப் போன கணவன்..! இறுதியில் நேர்ந்த சோகம்..!

1780

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் பகுதியை சேர்ந்த மனிஷா என்பவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர். இவருக்கும், வாகன ஓட்டுநர் அபின்ராஜ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மனிஷா வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த 1 வருடமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அபின்ராஜிடம், மனிஷா கூறியுள்ளார். நான் அனிதா என்ற பெண்ணையும் காதலிக்கிறேன் என்று அபின்ராஜ் கூறவே, மனிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அபின்ராஜிடமும், அவர் காதலிக்கும் அனிதா என்ற பெண்ணிடமும் மனிஷா அழுது கெஞ்சியுள்ளார். ஒருவழியாக திருமணம் செய்து கொள்வதாக அபின்ராஜ் ஒத்துக்கொண்டு, இருவரும் கடந்த 25-ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவருக்கும் திருமணம் நடந்துவிட்ட நிலையிலும், அபின்ராஜ் அனிதாவுடன் உறவு வைத்திருக்கிறார். இதனையறிந்த மனிஷா மனஉளைச்சலுக்கு ஆளாகி தூக்கில் தொங்கி சூசைட் செய்து கொண்டுள்ளார்.

மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனிஷாவின் தந்தை புகார் கொடுத்ததன் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறுதியில் அபின்ராஜ் தான் மனிஷாவின் தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினரால் அபின்ராஜ் கைது செய்யப்பட்டார்.