கைக்குழந்தை..! பெண் செய்த செயல்..! அதிர்ந்த விமான நிலைய அதிகாரிகள்..!

576

பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா விமான நிலையம். இந்த விமான நிலையத்திற்குள் சற்று தயக்கதுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை சந்தேகத்துடன் பார்த்த அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

முதலில் அவர் கொண்டு வந்த லக்கேஜ்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எதுவும் இல்லை. இதனைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த பெரிய ஹேண்ட் பேக்கை பார்த்ததும், சந்தேகம் அடைந்து பேக்கை செக் செய்துள்ளனர். அதை திறந்துப் பார்த்ததும் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆம், அதில் பிறந்து 6 நாட்களே ஆன கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து, இது யாருடைய குழந்தை என்று அதிகாரிகள் கேள்வி எழுப்ப, இந்த குழந்தையின் உறவினர் தான் நான் என்றும், ஆனால் அதற்கான எந்தவொரு ஆவனமும் தற்போது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்நாட்டு சட்டத்தின் படி, பெற்றோர் அல்லாதோர் ஒரு குழந்தையை வெளியே எடுத்து செல்ல பெற்றோரின் அனுமதி கடிதம் அல்லது உரிய ஆவனம் வேண்டும். இதனால் குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பிய அதிகாரிகள், அந்த பெண்ணிடம் விசாரணைணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.