கணவனுக்கு 2-வது திருமணம்! மாமனாரை எரித்துக்கொன்ற மருமகள்!

944

திருத்தணி அருகே உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவர், தனது மகன் பிரபாகரனுக்கு, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் காயத்திரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மணமான ஓராண்டுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், சபாபதி அண்மையில் தனது மகனுக்கு 2வது திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதல் மனைவி காயத்திரி, தனது தாயுடன் சென்று, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சபாபதியை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக காயத்திரி மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.