“அவரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பேன்..” – கணவனை கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்..!

1309

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள செங்கல் சூளைமேடு பகுதியில் வசித்து வந்தவர் முருகன். 38 வயதாகும் இவருக்கு, தேவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி அன்று முருகன் அவரது வீட்டில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், முருகனின் மனைவிக்கும், லாரி ஓட்டுநர் வினோத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதும், கணவன் இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனை ஏவி மனைவியே கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தேவியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் வினோத்திற்கும் கள்ளக்காதல் இருந்தது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து ஜாலியாக இருப்பேன். இந்த விஷயம் கணவருக்கு தெரிந்துவிட்டது.

இதனால் என்னை அழைத்து கண்டித்தார். இவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேவியின் கள்ளக்காதலன், கொலை செய்த பயத்தில் மறுநாளே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர், அவருக்கு சிகிச்சை முடிந்ததும் அவரிடமும் விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளனர்.