பெற்ற தாயை கொன்றுவிட்டு சுற்றுலா சென்ற மகள்..!

563

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அம்ருதா, ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் அம்ருதா, கடந்த சிலநாட்களாக ஐதராபாத்தில் பணிமாறுதல் பெற்று அங்கு செல்ல இருப்பதாக கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த கடந்த 2ம் தேதி, தனது அறையில் உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்த போது, அவரது தாய் நிர்மலா மற்றும் சகோதரரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், கத்தியை எடுத்து தாய் மற்றும் சகோதரரை குத்திவிட்டு, அடுத்த சில மணிநேரத்தில் தனது ஆண் நண்பர் ஸ்ரீதர்ராவுடன் சேர்ந்து அந்தமான் தீவுகளுக்கு அம்ருதா, சுற்றுலா சென்றுள்ளார்.

இதில், தாய் நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரின் சகோதரர், போலீசில் புகாரளித்தார். புகாரை விசாரித்த பெங்களூரு போலீசார், அந்தமான் போலீசார் உதவியுடன் இருவரையும் கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டில் கடன் தொல்லையால் விரக்தியடைந்த அம்ருதா, தாயையும், சகோதரரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ள தீர்மானித்துள்ளார். அதன்படி, தாயை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முன்னதாக நண்பருடன் சுற்றுலா செல்லவும் ஆசைப்பட்டு, அந்தமான் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.