ஒரு வாரத்திற்கு பின் வீட்டிற்கு வந்த தந்தை..! காத்திருந்த அதிர்ச்சி..! மகள் செய்த கொடூரம்..!

1709

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹயாத் நகரில் வசித்து வந்தவர் ஸ்ரீனிவாஸ். லாரி ஓட்டுநராக இருக்கும் இவருக்கு, ரஞ்சிதா என்ற மனைவியும், கீர்த்தி என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீனிவாஸ் கடந்த வாரம் வேலைக்கு சென்றுவிட்டு 24-ஆம் தேதி அன்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததால், தனது மகள் கீர்த்திக்கு போனில் அழைப்பு விடுத்து, ரஞ்சிதா குறித்து கேட்டுள்ளார். அதற்கு, தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும், தாய் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் பதில் அளித்திருக்கிறார். பின்னர், கீர்த்தி வீட்டிற்கு வந்ததும், இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முதலில் கீர்த்தியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு, தனது தந்தை ஒரு குடிக்காரர் என்றும், அவர் அடிக்கடி தனது தாயை குடித்துவிட்டு வந்து அடிப்பார் என்றும், எனவே தான் இல்லாத நேரத்தில் தனது தாயை, தந்தை கொன்றிருக்காலம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, ஸ்ரீனிவாசிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், தான் ஒரு வாரமாக வேலைக்கு சென்றுவிட்டு இப்போது தான் வீட்டுக்கு திரும்பினேன் என்று கூறியுள்ளார். பின்னர், புகாரைப்பெற்றுக்கொண்டு, போலீசார் இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, கீர்த்தியின் நண்பர் பால் ரெட்டி என்பவரின் தந்தையை, ஸ்ரீனிவாஸ் எதார்த்தமாக சந்தித்துள்ளார். அப்போது, கடந்த 2 நாட்களாக கீர்த்தி தனது வீட்டில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஸ்ரீனிவாஸ்க்கு, தன்னிடம் விசாகப்பட்டினத்தில் இருந்ததாக தானே கீர்த்தி கூறினாள் என்று மகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில், ரஞ்சிதாவின் சடலத்தை ரயில் தண்டவாளம் ஒன்றில் இருந்து போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீனிவாசின் தகவலைத்தொடர்ந்து, காவல்துறையினர், கீர்த்தியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில் கீர்த்தி அரங்கேற்றிய பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன்படி, கீர்த்தியும், பக்கத்து வீட்டை சேர்ந்த சசி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம், தாய் ரஞ்சிதாவிற்கு தெரிய வரவே, அவர் கீர்த்தியை கண்டித்துள்ளார். இதனால் தாய் மீது கோபத்தில் இருந்த கீர்த்தி, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ரீனிவாஸ் வேலைக்கு சென்றுள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரஞ்சிதாவை, கீர்த்தியும், சசியும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் கொலையை தற்கொலையாக மாற்ற வேண்டும் என்று நினைத்து, ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். காதலுக்காக, பெற்ற தாயை மகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of