“துணி துவைக்க வேற இடமா கிடைக்கல?” | London | Clothes Wash | Elwin

496

எல்வின் மென்சா லண்டனை சேர்ந்தவர் இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளார் மேலும் அவருடன் பலர் அந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

ரெயில் சென்று கொண்டிருந்த எல்வின் சட்டென்று தான் கொண்டு வந்திருந்த வாளியில் இருந்த தண்ணீரை ஊற்றி சோப்புப்பொடி போட்டு துணிகளை ஊறவைத்தார். இதனை அருகில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் ஒருவித குழப்பத்துடன் பார்த்தனர்.

அதைப் பற்றி துளியும் கவலைப்படாத எல்வின், துணிகளை துவைத்து, தான் கையோடு எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து அதில் காயப்போட்டார். பின்னர் அவர் சகஜமாக அமர்ந்து கொண்டார்.

எல்வின் மென்சாவின் இந்த செயல் பயணிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. நீண்ட நேரத்துக்கு பிறகுதான் எல்வின் மென்சா, ‘பிராங்’ எனப்படும் டி.வி. நிகழ்ச்சிக்காக இப்படி செய்தது தெரியவந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of