ஒடிசாவில் பயங்கரம், பெண் தேர்தல் அதிகாரி சுட்டுக்கொலை

333

ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பாராளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

புல்பானி சட்டசபை தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பணிபுரிய வந்த சஞ்சுக்தா திகால் என்ற பெண் அதிகாரியை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொலை செய்தனர்.

தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரியை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.